வெள்ளத்தில் சிக்கி மாயமான வாலிபர் 2 நாட்களுக்கு பிறகு ஓடையில் பிணமாக மீட்பு

நேற்று இரவு என்.ஜி.ஓ காலனி பகுதியில் உள்ள ஓடையில் அவரது மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக தீயணைப்பு துறையினர் அனுப்பி வைத்தனர்.
வெள்ளத்தில் சிக்கி பலியான வாலிபர் அருணாச்சலம் பிணமாக மீட்கப்பட்ட காட்சி
வெள்ளத்தில் சிக்கி பலியான வாலிபர் அருணாச்சலம் பிணமாக மீட்கப்பட்ட காட்சி
Published on

நெல்லை:

பாளை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள திருமால்நகர் பகுதியை சேர்ந்தவர் சேர்மன். இவரது மகன் அருணாச்சலம் (வயது 19).

இவர் கடந்த 17-ந்தேதி இரவு தனது சகோதரியை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் புதிய பஸ் நிலையம் நோக்கி சென்றுள்ளார்.

அப்போது என்.ஜி.ஓ.காலனி பகுதியில் கனமழையில் சாலையில் சென்ற மழை வெள்ளத்தில் அவர் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து விட்டார்.

இதனிடையே அருணாச்சலத்தை காணாததால் அவரது பெற்றோர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடுமையான வெள்ளம் வந்து கொண்டிருந்த பகுதி வழியாக அவர் சென்றதால் அருணாச்சலம் மோட்டார் சைக்கிளுடன் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி அவரை தேடினர்.

இந்நிலையில் நேற்று இரவு என்.ஜி.ஓ காலனி பகுதியில் உள்ள ஓடையில் அவரது மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.

இதனால் அதில் இருந்து சற்று தொலைவு வரை ஜே.சி.பி மூலமாக அருணாச்சலத்தை தீயணைப்புத் துறையினர் தேடிய நிலையில் இன்று காலை ஓடைக்குள் சிக்கி உயிரிழந்த நிலையில் அவர் பிணமாக மீட்கப்பட்டார்.

அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக தீயணைப்பு துறையினர் அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com