இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார் அஞ்சலி

பாரதிராஜாவின் மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்.
TN Ministers N.Anand, Nirmal Kumar
Published on

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா (84) சிகிச்சை பலனின்றி காலமானார்.

நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவின் உயிர் பிரிந்தது. அவரது மறைவு தமிழ் சினிமாவில் ஒரு பெரும் சோகமாகியுள்ளது.

பாரதிராஜாவின் மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com