2,500 தி.மு.க மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சரளை பகுதியில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.இதைத்தொடர்ந்து ஈரோடு ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
2,500 தி.மு.க மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Published on

ஈரோடு:

தமிழகம் முழுவதும் தி.மு.க.வில் உள்ள மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகளை கவுரப்படுத்தும் வகையில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்றது.

அதன்படி ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த தெற்கு, வடக்கு மாவட்ட மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சரளை பகுதியில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இவ்விழாவில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் , தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கம் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2,500 மூத்த தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளை வழங்கி கவுரவிக்கிறார். இதே போல கொரோனா தொற்றினால் இறந்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கும் நிதியுதவி வழங்குகிறார்.

இதைத்தொடர்ந்து ஈரோடு ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து பெருந்துறை சிப்காட் பகுதியில் ரூ.40 கோடி மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதியம் நாமக்கல் மாவட்டத்திற்கு செல்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com