தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது- அமைச்சர் சிவசங்கர்

தமிழக முதலமைச்சர் ஏற்கனவே சட்டசபையில் அறிவித்தபடி 1,000 புதிய பஸ்கள் வாங்குவதற்கு ரூ.420 கோடி ஒதுக்கி தற்போது அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று முதலமைச்சர் பஸ் கட்டணம் உயர்வு கிடையாது என ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது- அமைச்சர் சிவசங்கர்
Published on

நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டைமேட்டில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதலமைச்சர் ஏற்கனவே சட்டசபையில் அறிவித்தபடி 1,000 புதிய பஸ்கள் வாங்குவதற்கு ரூ.420 கோடி ஒதுக்கி தற்போது அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு, புதிய வாகனங்கள் வாங்கி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பொதுமக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று முதலமைச்சர் பஸ் கட்டணம் உயர்வு கிடையாது என ஏற்கனவே அறிவித்திருக்கிறார். மினி பஸ் உரிமையாளர்கள், முதலமைச்சரை சந்தித்து, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர். அதுகுறித்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி இருக்கிறோம். விரைவில் அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com