போலி சான்றிதழ் கொடுத்து அறநிலையத் துறையில் சேர்ந்தவர்கள் குறித்து விசாரணை- அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் திருடு போன 166 கோவில் சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் 82 சிலைகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமைச்சர் சேகர்பாபு (கோப்பு படம்)
அமைச்சர் சேகர்பாபு (கோப்பு படம்)
Published on

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் நில ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 884 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலுவையில் இருந்த ரூ.260 கோடி வாடகை பாக்கியை வசூலித்துள்ளோம். மதுரை மீனாட்சியம்மன் கோவிலை போன்று தமிழகத்திலுள்ள 48 முதுநிலை கோவில்களில் செல்போன் தடை செயல்படுத்தப்படும்.

முதலில் திருச்செந்தூர் கோவிலில் அமல்படுத்தப்படும். திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், கண்ணகி கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. சில மலைக்கோவில்களில் பாதை அமைப்பது தொடர்பாக வனத்துறையுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.

தி.மு.க. அரசு பொறுப்பேற்று வெளிநாடுகளில் இருந்து 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 82 சிலைகள் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் திருடுபோன 166 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சிலைகள் தங்களுக்கு சொந்தமானது என சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகம் தகுந்த ஆதாரம் மற்றும் சான்றிதழுடன் அணுகினால் அவர்களிடமே சிலை ஒப்படைக்கப்படும்.

போலி சான்றிதழ் மூலம் அறநிலையத்துறையில் பணியில் சேர்ந்தவர்கள் குறித்து தகுந்த ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்களே விசாரித்து உண்மை என்றால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com