அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

25-ந்தேதி ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிமன்றம் காவல் இன்று வரை நீட்டிப்புஎம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்
Published on

சட்ட விரோத பண பரிமாற்றம் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 25-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரின் நீதிமன்றம் காவல் ஆகஸ்ட் 28-ந்தேதி வரை (இன்று) நீட்டிக்கப்பட்டது.

அதன்படி இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து இன்று எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

முன்னதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த கடந்த 7-ந்தேதி நீதிமன்றம் அனுமதி அளித்தது, அதன்படி 12-ந்தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து நாட்கள் விசாரணை நடத்தினர். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஆகஸ்ட் 25-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணையின்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக தெரிகிறது. செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

X

Maalai Malar
www.maalaimalar.com