பரமபத வாசல் திறப்பை காண முதலில் விண்ணப்பிக்கும் 500 பேருக்கு அனுமதி இலவசம்- அமைச்சர் சேகர்பாபு

பரமபதவாசல் திறப்பை காண்பதற்கு ஒரு நபருக்கு ரூ.500 என 1,500 பேருக்கு அனுமதி வழங்கப்படும்.கர்ப்பிணிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வழி அமைத்து சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பரமபத வாசல் திறப்பை காண முதலில் விண்ணப்பிக்கும் 500 பேருக்கு அனுமதி இலவசம்- அமைச்சர் சேகர்பாபு
Published on

சென்னை:

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பை காண முதலில் விண்ணப்பிக்கும் 500 பேருக்கு அனுமதி இலவசம்.

பரமபத வாசல் திறப்பை காண்பதற்கு ஒரு நபருக்கு ரூ.500 என 1,500 பேருக்கு அனுமதி வழங்கப்படும்.

மதியம் 2 மணி முதல் 4 மணி வரை கர்ப்பிணிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வழி அமைத்து சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com