குன்றத்தூர் திருவாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

குன்றத்தூர் நத்தம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திருவாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.
குன்றத்தூர் திருவாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
Published on

பூந்தமல்லி:

குன்றத்தூர் நத்தம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் சிதலமடைந்து காணப்பட்ட இந்த கோவிலை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், பக்தர்களும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கோவிலை ஆய்வு செய்தனர்.

பின்னர் கோவிலை சீரமைப்பது குறித்தும் கோவிலுக்கு உரிய இடங்கள் எங்கெங்கு உள்ளது என்பது குறித்தும் பல்வேறு பணிகள் குறித்து அதிகாரியுடன் ஆலோசனை செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com