பொன்னாடை அணிவிக்கும் வழக்கத்தை தவிர்த்து புத்தகங்களாக வழங்குங்கள்- அமைச்சர் ரமேஷ்

பொன்னாடை அணிவிக்கும் வழக்கத்தை தவிர்த்து புத்தகங்களாக வழங்கினால் அவற்றை படிக்கவும், பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வழங்கிடவும் வழிவகையாக இருக்கும்.
அமைச்சர் ரமேஷ்
Published on

சென்னை:

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

அன்புள்ள அனைவருக்கும் அன்புடன் ஒரு வேண்டுகோள்.,

என்னை சந்திக்க வருகின்ற அனைத்து அன்பு உள்ளங்களின் அன்பினை நான் உணர்கிறேன், அதே சமயத்தில் பொன்னாடை அணிவிக்கும் வழக்கத்தை தவிர்த்து புத்தகங்களாக வழங்கினால் அவற்றை படிக்கவும், பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வழங்கிடவும் வழிவகையாக இருக்கும்.

தயவுசெய்து பொன்னாடைகளை தவிர்த்து புத்தகங்களை வழங்குக! நன்றி!! என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com