தமிழகத்துக்கு 2 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை- அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

தமிழரின் பண்பாடு, கலாசாரத்தை கடைபிடிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இந்தியாவில் தமிழக சுற்றுலாத்துறை முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்துக்கு 2 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை- அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
Published on

ஊட்டி:

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழரின் பண்பாடு, கலாசாரத்தை கடைபிடிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கலைப்பண்பாட்டு துறை சார்பில் 2 நாட்களுக்கு சென்னை தீவுத்திடலில் நாட்டுப்புற கலைஞர்களுக்காக கலை பண்பாட்டு திருவிழா நடத்தப்பட்டது.

மேலும் பரதநாட்டியம், சிலம்பாட்டம், பறை சாற்றுதல், குச்சி பிடியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட அனைத்து கலைகளையும், நாட்டுப்புறக் கலைஞர்களையும் வளர்க்கும் நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற கலைகளை வளர்ப்பதன் மூலம் தமிழ்மொழி வளரும்.

அனைத்து துறைகளையும் சிறந்த துறைகளாக கொண்டுவர முதலமைச்சர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்தியாவில் தமிழக சுற்றுலாத்துறை முதலிடத்தில் உள்ளது. கொரோனா காலத்தில் 2019-20-ம் ஆண்டில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது.

தமிழகத்துக்கு கடந்த 2021-ம் ஆண்டில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், 11 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர். இது மிகப்பெரிய வளர்ச்சி. சுற்றுலா பயணிகளுக்காக தங்கும் வசதி, போக்குவரத்து வசதி, சூழல் சுற்றுலா, பண்பாட்டு சுற்றுலா, மருத்துவ சுற்றுலா என பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com