தலைமைச் செயலகத்தில் குயிக் பைட்ஸ் துரித உணவகம்: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் திறந்து வைத்தார்

டீ, காபி, கேக் வகைகள், பப்ஸ், குளிர் பானங்கள், ஜஸ்கிரீம்களுடன் 99 ரூபாய்க்கு பிரியாணி.
Quick Bites
குயிக் பைட்ஸ்
Published on

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு வகைகள் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஹோட்டல் தமிழ்நாடு, அமுதகம் உணவகங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நடத்தப்படும் படகு குழாம்கள், வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தரமான சிறு உணவுகள், தின்பண்டங்கள் கிடைக்கச் செய்யும் வகையில் குயிக் பைட்ஸ் என்ற சிற்றுண்டி துரித உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.

99 ரூபாய்க்கு பிரியாணி

அதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக டீ, காபி, கேக் வகைகள், பப்ஸ், குளிர் பானங்கள், ஜஸ்கிரீம்கள் உள்ளிட்ட சிற்றுண்டிகள் மற்றும் ரூ 99/-க்கு பிரியாணி விற்பனை செய்யும் வகையில் குயிக் பைட்ஸ் சிற்றுண்டி துரித உணவகத்தை சுற்றுலாத்துறை செ. ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர்/மாவட்ட வருவாய் அலுவலர் சி. லட்சுமி பிரியா மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com