

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஆவணங்கள் மாயமாகி உள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஆவணங்கள் மாயமானது தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது:-
* கடந்த மாதம் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பின்னர் திருட்டு நடைபெற்று இருப்பதால் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
* 5 வருட டெண்டர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட தரவுகளின் பேக்கப்புகளை எடுக்க வேண்டிய வேலை உள்ளது.
* எத்தனை ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன என்பது விசாரணை முடிவில் தெரியப்படுத்துகிறோம்.
* ஹார்டு டிஸ்க் திருட்டு தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முறையான விசாரணை நடைபெறுகிறது.
* மின்வாரிய ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு விவகாரத்தில் அதிகாரிகள் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
* தமிழகத்தில் மின்தடை உள்ளிட்ட மின்சாரத்துறை பிரச்சனைகளை சரிசெய்ய நிச்சயம் கால அவகாசம் தேவை.
* மின்சாரத்துறையில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்வதற்கான 100 சதவீத பணிகளை தொடங்கியுள்ளோம் என்றார்.