கர்நாடகா உள்ளிட்ட 3 மாநிலங்களை ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிட்ட அமைச்சர் மரிய வில்சன்!

வட்டி, சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு மட்டுமே 64% நிதி செலவிடப்படுகிறது.
கர்நாடகா உள்ளிட்ட 3 மாநிலங்களை ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிட்ட அமைச்சர் மரிய வில்சன்!
Published on

தமிழ்நாட்டின் நிதிநிலைமை குறித்த 21 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

இதில் 2021-2022 முதல் 2025-2026 வரையிலான நிதியாண்டு காலம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கை தமிழ்நாட்டிற்கு இணையான தொழில்துறை அமைப்பும், பொருளாதார அளவும் கொண்ட கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களுடன் நிதி நிலைமையோடு ஒப்பீடு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பொதுத்துறை நிறுவனங்களின் கடனையும் சேர்த்தால் தமிழ்நாட்டின் உண்மையான கடன் ரூ.13.18 லட்சம் கோடி எனவும், 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் சொந்த வரி வருவாய் 5.45% சரிந்துள்ளதுடன், அரசின் வருவாயில் ஒவ்வொரு ரூபாயிலும் 22.8 பைசா வட்டி கட்டுவதற்கே செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-21இல் ரூ.67,087ஆக இருந்த தனி நபர் மீதான கடன், 2025-26ல் ரூ.1,28,934 ஆக உள்ளது. வட்டி, சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு மட்டுமே 64% நிதி செலவிடப்படுவதால், புதிய திட்டங்களுக்கு வெறும் 13% மட்டுமே ஒதுக்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com