அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 மணி நேரத்துக்கு செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருந்தார்.கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் வருகிற 24-ந்தேதி கலைஞர் நூற்றாண்டு மெகா மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

சென்னை:

அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருதயத்தில் அடைப்புகள் இருந்ததால் நேற்று காலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 மணி நேரத்துக்கு செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருந்தார். அதன் பிறகு அவருக்கு மயக்கம் தெளிந்தது.

இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கூறியதாவது:-

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் வருகிற 24-ந்தேதி கலைஞர் நூற்றாண்டு மெகா மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதற்காக 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. இதில் பல் மருத்துவம், காச நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com