டாக்டர் பாலாஜியை சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட டாக்டருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கிண்டி கலைஞர் மருத்துவமனையில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
டாக்டர் பாலாஜியை சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

சென்னை கிண்டியில் உள்ள ஆஸ்பத்திரிக்குள் புகுந்து அரசு டாக்டர் மீது வாலிபர் வெறித்தனமாக தாக்குதல் நடத்தினார். 7 இடங்களில் கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட டாக்டருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட டாக்டர் பாலாஜியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து கிண்டி கலைஞர் மருத்துவமனையில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

டாக்டர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com