அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி பயணம்

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் பேச உள்ளார். காவிரி மற்றும் முல்லை பெரியாறு விவகாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Minister Durai Murugan - Cauvery water
Published on

சென்னை:

தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது.

இதற்கு நிரந்தர தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக இந்த ஆணையங்கள் அவ்வப்போது உத்தரவிட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி செல்கிறார். அவர் இன்று மாலை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்து பேச உள்ளார்.

காவிரி மற்றும் முல்லை பெரியாறு விவகாரம் குறித்து அவர் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காவிரியில் உரிய நீரை திறந்து விட, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்த உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com