திமுகவிற்கு பாடம் எடுத்துள்ளார் முதலமைச்சர் விஜய் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

முக ஸ்டாலினை அங்கிள் என்று கூறியதற்கு முதலமைச்சர் விஜய் வருந்தினார்.
Aadhav Arjuna
Aadhav Arjuna
Published on

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை தவெக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு உரையாற்றினார். இதில் முதலமைச்சர் விஜய், புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இந்த கூட்டத்தில் பேசியதாவது;

"தவெக ஆட்சி அமைந்த 80 நாட்களில் திமுகவின் ஒரே கொள்கையே, தவெக ஆட்சியை எப்படி கவிழ்ப்பது என்பது தான். தவெக எம்எல்ஏ க்களிடம் ரூ.50 கோடி, ரூ 100 கோடி தருவதாக செந்தில் பாலாஜி தரப்பு விலை பேசியது. கொளத்தூர் மக்கள் ஏன் தன்னை தூக்கி எறிந்தார்கள் என்பதை முக ஸ்டாலின் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. கொளத்தூர் சென்ற முதலமைச்சர் விஜய்யால் அன்று சேப்பாக்கம் செல்ல முடியாமல் போனது. அதனால் சேப்பாக்கம் மிஸ் ஆகிவிட்டது.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேச தொடங்கி பார்ட்டி பண்ட் எனக் கூறியவுடன் திமுகவினர் ஓடி விட்டனர். சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அமைதியாக இருந்தார், திமுகவினர் அம்பலப்பட்டுவிட்டனர். எதிர்காலமே இல்லாத திமுக கட்சி, எங்கள் கட்சி எம்எல்ஏக்களை விலை பேச முயற்சித்து மாட்டிக்கொண்டது. திமுகவின் சாம்ராஜ்யம் முடிந்து விட்டது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு 6 மாதம் எடுத்துக்கொண்டனர்.

ஆட்சியில் இருந்தபோது துணை முதலமைச்சர் என உதயநிதி க்கு பட்டாபிஷேகம், தற்போது எதிர்க்கட்சி தலைவர் என்று பட்டாபிஷேகம். ஒருமுறை கூட முதலமைச்சர் விஜய் ஒருமையில் பேசியதில்லை, முக ஸ்டாலினை அங்கிள் என்று கூறியதற்கு முதலமைச்சர் வருந்தினார். பெண்களை கொச்சமாக பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார் கருணாநிதி பெண்களை சக மனுஷியாக கூட நினைக்கவில்லை உதயநிதி" என்று கடுமையாக சாடியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com