சென்னையில் 14 சுரங்கப்பாதைகள் மூடல்

கனமழை காரணமாக சாலைகளில் குளம்போல் மழை வெள்ளம் தேக்கம்.சுரங்கப்பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 14 சுரங்கப்பாதைகள் மூடல்
Published on

மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், சாலையின் சுரங்கப்பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மழைநீர் வடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறைக்கு உள்பட்ட மாநராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் கணேசபுரம், கொங்கு ரெட்டி, பெரம்பூர், வில்லிவாக்க், ரங்கராஜபுரம், அரங்கநாதன், துரைசாமி உள்ளிட்ட 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

15 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இதில் 2 இடங்களில் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. திருமங்கலம் எஸ்டேட் சாலையில் அதிகளவில் மழைநீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com