மேட்டூர் அணை நீர்மட்டம் 119.24 அடியாக குறைந்தது

நீர்வரத்து குறைந்ததால் 16 கண் பாலம் வழியாக உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 119.24 அடியாக குறைந்தது
Published on

சேலம்:

கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக உபரிநீர் வரத்து அதிகரித்து மேட்டூர் அணை கடந்த 30-ந் தேதி 120 அடியை எட்டியது. இதையடுத்த உபரி நீர் 16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நீர்வரத்து குறைந்ததால் 16 கண் பாலம் வழியாக உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. தற்போது அணைக்கு குறைந்த அளவிலேயே தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அது 6 ஆயிரத்து 548 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் வெளியேற்றப்பட்டுவருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119.24 அடியாக குறைந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com