தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வியாபாரி பலி- மனைவியை தேடும் பணி தீவிரம்

தாமிரபரணி ஆற்றில் சகர்பானு ஆழமான பகுதிக்கு சென்று விட்டார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய கணவன்-மனைவி 2 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றில் மூழ்கிய பெண் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ள காட்சி
ஆற்றில் மூழ்கிய பெண் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ள காட்சி
Published on

நெல்லை:

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் லுக்மான் ஹக்கீம் (வயது 44). இவரது மனைவி சகர்பானு (33).

லுக்மான் ஹக்கீம் பழைய பேப்பர்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இதன் காரணமாக அவர் குடும்பத்துடன் நெல்லை மேலப்பாளையத்தில் வந்து தங்கி உள்ளார்.

இவர்கள் 2 பேரும் இன்று காலை தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர். அவர்களுடன் மதுரையை சேர்ந்த அவரது உறவினராக முகம்மது உள்பட 2 பேர் உடன் சென்றனர். டவுன் கருப்பந்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் 4 பேரும் குளித்து கொண்டு இருந்தனர்.

அப்போது சகர்பானு ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். தண்ணீரில் மூழ்கிய அவர் உயிருக்கு போராடியபடி தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தார். இதனை பார்த்த அவரது கணவர் லுக்மான் ஹக்கீம் மனைவியை காப்பாற்றுவதற்காக அந்த பகுதிக்கு நீந்திச்சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது உறவினர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய கணவன்-மனைவி 2 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சந்திப்பு போலீசாரும் அங்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்திலேயே லுக்மான் ஹக்கீம் சடலமாக மீட்கப்பட்டார். சகர்பானு உடலை தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து சகர்பானு உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com