மேகதாது அணை: ஒரு செங்கலைக்கூட கர்நாடகா வைக்க முடியாது... சீனு ராமசாமியின் முக்கியப் பதிவு!

மேகதாது அணைக்கு கர்நாடக அரசால் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது.
மேகதாது அணை: ஒரு செங்கலைக்கூட கர்நாடகா வைக்க முடியாது... சீனு ராமசாமியின் முக்கியப் பதிவு...
Published on

கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு இன்னும் சுற்றுசூழல் அனுமதி வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு இன்று தெரிவித்தது. மேலும் வன அனுமதி கோரியும் எந்த முன்மொழிவும் தங்களிடம் வைக்கப்படவில்லை எனவும் தெளிவுப்படுத்தியது.

இந்நிலையில் இந்த திட்டத்திற்காக மத்திய அரசிடம் கர்நாடக அரசு இன்னும் பெறாத முக்கிய அனுமதிகள் என இயக்குநர் சீனு ராமசாமி, தற்போதைய தமிழ்நாடு சூழலுக்கு தேவையான சமூக வலைத்தளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

  • வன அனுமதி: மத்திய வனத்துறையின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட (Stage I & Stage II) வன அனுமதிகள் பெறப்படவில்லை.

  • சுற்றுச்சூழல் & வனவிலங்கு அனுமதி: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (EC) அனுமதியும், தேசிய வனவிலங்கு வாரியத்தின் (NBWL) அனுமதியும் பெறப்படவில்லை.

  • காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA): விரிவான திட்ட அறிக்கைக்கான (DPR) ஒப்புதல் நிலுவையில் உள்ளது.

  • தொழில்நுட்ப அனுமதிகள்: மத்திய நீர் ஆணையம் (CWC) மற்றும் மத்திய மின்சார ஆணையம் (CEA) ஆகியவற்றின் இறுதித் தொழில்நுட்ப அனுமதிகள் இல்லை.

  • நீதிமன்ற வழக்குகள்: உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (NGT) தமிழ்நாடு அரசு மற்றும் 'பூவுலகின் நண்பர்கள்' உள்ளிட்ட சூழலியல் அமைப்புகள் தொடுத்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இத்தனை சட்டப்பூர்வ அனுமதிகளையும் பெறாமல் கர்நாடக அரசால் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது என்கின்றன தரவுகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com