வந்தே பாரத் ரெயிலின் ஜன்னலை சுத்தியல் கொண்டு உடைத்த வாலிபர்... வீடியோ வைரல்

வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.வீடியோவை வெளியிட்ட அமர்பிரசாத் ரெட்டி, கடுமையான தண்டனை கட்டாயம் தேவை என பதிவிட்டுள்ளார்.
வந்தே பாரத் ரெயிலின் ஜன்னலை சுத்தியல் கொண்டு உடைத்த வாலிபர்... வீடியோ வைரல்
Published on

சென்னை:

பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சில நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் நின்று கொண்டு இருக்கும் வந்தே பாரத் ரெயிலின் ஜன்னல் கண்ணாடியை வாலிபர் ஒருவர் சுத்தியலைக் கொண்டு உடைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வாலிபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வீடியோவை வெளியிட்ட அமர்பிரசாத் ரெட்டி, கடுமையான தண்டனை கட்டாயம் தேவை என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் எதுவும் இடம்பெறவில்லை. 

X

Maalai Malar
www.maalaimalar.com