

புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்க உள்ள நிலையில் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டிருந்த சந்தீப் ரத்தோரை சிறைத்துறை டிஜிபியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் சிறைத்துறை டிஜிபியாக இருந்த சங்கர் அமலாக்கப்பணியக குற்ற புலனாய்வுத்துறை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் 34-வது சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் இன்று பதவியேற்றார். டிஜிபி அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக காவல்துறையின் 34வது டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மகேஷ் குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர்.
சட்டம்- ஒழுங்கு பணியில் மிகுந்த அனுபவம் கொண்டவர் மகேஷ் குமார். 1994ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரி மகேஷ் குமார் அகர்வால். சட்டப்பிரிவில் பிஏ பட்டமும், வழக்கறிஞருக்கான சட்டப்படிப்பும் படித்தவர்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளை நன்கு அறிந்தவர். சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்
சென்னை போக்குவரத்து துணை ஆணையர், தூத்துக்குடி எஸ்பி ஆக இருந்தவர். சிசிடிவி கேமராக்களை சென்னை நகரில் நிறுவ வலது கரமாக செயல்பட்டவர்.
நைட் கிரைம் டூ ஜீரோ என்ற திட்டத்தை காவல்துறையில் அறிமுகப்படுத்தியவர். சேலம் ரெயில் கொள்ளை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை கையாண்டவர். மெச்சத்தகுந்த பணிக்காக முதலமைச்சரின் பதக்கத்தைப் பெற்றவர் மகேஷ் குமார்.