மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம் -மாற்றுத் திறனாளிகள் ஆணையரகம் நோட்டீஸ்

மகாவிஷ்ணுவின் மூடநம்பிக்கை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.மகாவிஷ்ணுவுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம் -மாற்றுத் திறனாளிகள் ஆணையரகம் நோட்டீஸ்
Published on

சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.

கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.

இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து இரு பிரிவினர் இடையே பகையை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவமதித்தல், வதந்திகள், பொய்யான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், மாற்றுத்திறனாளி ஆசிரியர் அவமதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர், பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் 25ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு மாற்றுத் திறனாளிகள் ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com