நினைவு தினம்: காந்தி சிலைக்கு கவர்னர் மலர் தூவி மரியாதை

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன்.
நினைவு தினம்: காந்தி சிலைக்கு கவர்னர் மலர் தூவி மரியாதை
Published on

சென்னை:

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அரசு சார்பில் அமைச்சர்கள், மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தள பதிவில்,

மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன். சத்தியம், அகிம்சை, எளிமை, உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய அவரது லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருப்பதுடன் அவை உள்ளடக்கிய மற்றும் நிலையான உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும் வழிகாட்டும் சக்தியாகவும் என்றும் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com