திருவள்ளூர் மாவட்டத்துக்கு 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் கவிதா அறிவிப்பு

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் திருத்தணி முருகன் கோவிலுக்கு திரளாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டம்
Published on

உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடிக்கிருத்திகை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திருத்தணி முருகன் கோவில் திகழ்கிறது.

கோவிலில் ஆண்டு தோறும் ஆடிக்கிருத்திகை விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா அடுத்த மாதம் 6-ந்தேதி (வியாழக்கிழமை) வருகிறது.

இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் திருத்தணி முருகன் கோவிலுக்கு திரளாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை

இதையடுத்து ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு வருகிற 6-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

திருத்தணியில் உள்ள முருகப்பெருமானின் 5-ம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) ஒருநாள் நடைபெற இருக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச் சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் சார் நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு 6.8.2026 அன்று செயல்பட வேண்டும்.

இந்த விடுமுறைநாளை ஈடுசெய்யும் பொருட்டு 8.8.2026 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com