சென்னை சட்ட பல்கலைக்கழகத்தில் இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய நூலக ஊழியர் கைது

மணியரசுக்கு வேறு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியானது. மணியரசு வக்கீல் ஒருவர் மூலமாக போலீசில் சரண் அடைந்தார்.
சென்னை சட்ட பல்கலைக்கழகத்தில் இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய நூலக ஊழியர் கைது
Published on

சென்னை:

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நூலக ஊழியராக பணிபுரிந்து வருபவர் மணியரசு. 29 வயதான இவர் திருச்சியை சேர்ந்தவர்.

இவர் சட்ட பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரை காதலித்துள்ளார். இதையடுத்து திருமண ஆசை காட்டி மணியரசு, பெண் ஊழியருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் இரண்டு முறை அவர் கர்ப்பமானார். இதுபற்றி கேட்டு தன்னை திருமணம் செய்ய பெண் ஊழியர் வற்புறுத்தி உள்ளார்.

ஆனால் திருமணம் செய்ய மறுத்த மணியரசு கர்ப்பத்தை கலைத்து விடுவோம். பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.

இதன்படி காதலியான பெண் ஊழியரின் கர்ப்பத்தையும் மணியரசு கலைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மணியரசுக்கு வேறு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து பெண் ஊழியர் அவரிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது மணியரசு திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுத்துளார். இதுபற்றி தேனாம்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஐ.பி.சி. சட்ட பிரிவுகளான 376 (கற்பழிப்பு), 312-(கர்ப்பத்தை கலைத்தல்), 417-(ஏமாற்றுதல்), 506(2)-(கொலை மிரட்டல்) ஆகிய 4 பிரிவுகளில் மணியரசு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மணியரசு வக்கீல் ஒருவர் மூலமாக நேற்று போலீசில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் மணியரசுவை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com