சட்டம் ஒழுங்கு- 3 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி டேவிட்சன் ஆலோசனை

புதுச்சேரி மதுபான கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை.கள்ளச் சாராயம், போதை பொருட்களை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை.
சட்டம் ஒழுங்கு- 3 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி டேவிட்சன் ஆலோசனை
Published on

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தினார்.

கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

3 மாவட்டத்திற்கும் சவாலாக உள்ள புதுச்சேரி மதுபான கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

சட்டம்- ஒழுங்கு குறித்தும் கள்ளச் சாராயம், போதை பொருட்களை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

பொது மக்கள் மற்றும் புகார் கொடுக்க வருபவர்களிடம் காவல் துறையினர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com