அண்ணா பிறந்தநாளில் ‘தாய்மாமன் சீர் திட்டம்’ தொடக்கம்: 1 கிராம் தங்க மோதிரம் வழங்க ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழக பாரம்பரிய மரபின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.  
Marie wilson
Published on

தமிழக சட்டமன்றத்தில் 2026-2027ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் என். மரிய வில்சன், தவெக அரசின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான 'தாய்மாமன் சீர் திட்டம்' குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அண்ணாவின் பிறந்தநாளில் தொடக்கம்:

தாய்மாமன் சீர் திட்டம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று முறைப்படி தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

1 கிராம் தங்க மோதிரம்:

தமிழக பாரம்பரிய மரபின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.  

நிதி ஒதுக்கீடு:

இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கவும், ஏழை எளிய குடும்பங்களின் தாய்மையின் மகிழ்ச்சியைக் கௌரவிக்கும் வகையிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com