கொடநாடு வழக்கு: துபாயில் தலைமறைவாக உள்ள அதிமுக வர்த்தக அணி தலைவருக்கு சம்மன்

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
கொடநாடு வழக்கு: துபாயில் தலைமறைவாக உள்ள அதிமுக வர்த்தக அணி தலைவருக்கு சம்மன்
Published on

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு தூபாயில் தலைமறைவாக உள்ள அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.

கூடலூர் அருகே அள்ளூர் வயல் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட தனது பணியாளர்களுக்கு கள்ள துப்பாக்கி வாங்கி கொடுத்த வழக்கில் 3வது குற்றவாளியாக சஞ்சீவன் சேர்க்கப்பட்டதால் கடந்த ஏப்ரலில் அவர் துபாய்க்கு தப்பி சென்று தலைமறைவானார்.

X

Maalai Malar
www.maalaimalar.com