கொடைக்கானல் படகு போட்டி ரத்து

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறதுஇன்று நடைபெறுவதாக இருந்த படகு போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் படகு போட்டி ரத்து
Published on

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர்.

தொடர் மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. கோடை விழாவின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் படகு போடி நடப்பது வழக்கம்.

இன்று நடைபெறுவதாக இருந்த படகு போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட படகு போட்டி மீண்டும் மே 25-ம் தேதி நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com