டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் மலையேற்றம் - கேரள மருத்துவர் உயிரிழப்பு

அஜ்சல் சைன் (26) மற்றும் பாகில் தயூப் ராஜ் (27) ஆகியோர் டாப்சிலிப் மலைப் பகுதியில் மலையேறியுள்ளனர். மலைப்பாதை வழிகாட்டிகள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் மலையேற்றம் - கேரள மருத்துவர் உயிரிழப்பு
Published on

பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் அஜ்சாள் சைன் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

அஜ்சல் சைன் (26) மற்றும் பாகில் தயூப் ராஜ் (27) ஆகிய இருவர் டிரக்கிங் தமிழ்நாடு திட்டத்தில் பதிவு செய்து முறையான அனுமதி பெற்று டாப்சிலிப் மலைப் பகுதியில் மலையேறியுள்ளனர். அப்போது இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த மலைப்பாதை வழிகாட்டிகள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அஜ்சல் சைன் உயிரிழந்தார். தற்போது மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com