மேகதாது அணைகட்ட கர்நாடகா தமிழ்நாட்டின் அனுமதியை பெறவேண்டிய அவசியமில்லை - மத்திய அரசு!

20218ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி மத்திய அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது.
மேகதாது அணைகட்ட கர்நாடகா தமிழ்நாட்டின் அனுமதியை பெறவேண்டிய அவசியமில்லை - மத்திய அரசு!
Published on

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு, தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி,

“காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்வதற்கு முன்பு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி போன்ற எந்த மாநில அரசின் ஒப்புதலையும் கர்நாடகா பெறவேண்டும் என்ற அவசியமில்லை என 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற திட்டங்களுக்கு கீழ்நிலை ஆற்று மாநிலங்களிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற எந்த விதியும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேகதாது அணைக்கு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி அரசுகளின் ஒப்புதலை கர்நாடகா பெற்றுள்ளதா? மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள அந்தத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அன்புமணி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் தான் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com