தமிழக எல்லையில் ஓசூர் நோக்கி வந்த கர்நாடக பஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டன

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் தமிழக-கர்நாடக எல்லையான ஓசூரை அடுத்த அத்திப்பள்ளிக்கு வரும் கர்நாடக மாநில பஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
ஓசூர் பஸ் நிலையம் வெறிச்சோடி இருப்பதையும் படத்தில் காணலாம்.
ஓசூர் பஸ் நிலையம் வெறிச்சோடி இருப்பதையும் படத்தில் காணலாம்.
Published on

ஓசூர்:

ஒமைக்ரான், கொரோனா தொற்று காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை  தமிழகத்தில்  அதிகரித்து வரும் நிலையில்,  தமிழக அரசு இரவு ஊரடங்கை அமல்படுத்தியது.

இதன்படி, கடந்த 6-ந் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு எனவும் அரசு அறிவித்தது.

இதன்படி நேற்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்த நிலையில் இன்று காலை கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓசூர் நோக்கி வந்த கர்நாடக அரசு பேருந்துகளை, தமிழக மாநில எல்லையான ஒசூர் ஜுஜுவாடி சோதனை சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகள்  கர்நாடகாவிற்கு திருப்பி அனுப்பி வைத்தனர். 

இதில் பயணம் செய்த குறைந்த அளவிலான பயணிகள், நடந்தே ஓசூர் நோக்கி வந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com