கன்வர்லால் குழுமத்தில் 3வது நாளாக சோதனை- ரூ.50 கோடிக்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

கன்வர்லால் குழுமத்தில் 3வது நாளாக சோதனை நடந்து வருகிறது.ரூ. 1 கோடி பணத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல்.
கன்வர்லால் குழுமத்தில் 3வது நாளாக சோதனை- ரூ.50 கோடிக்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு
Published on

போலியான ஆவணம் மூலம் மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருள் வாங்கிய புகாரில் கன்வர்லால் குழுமம் தொடர்படைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

செயற்கை வண்ண தயாரிப்பு, மருந்து விநியோகம் என பல்வேறு தொழில்களை நடத்தி வரும் கன்வர்லால் குழுமத்தில் 3வது நாளாக சோதனை நடந்து வருகிறது.

இதில், ரூ.50 கோடி வரி ஏய்ப்பு இருப்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கணக்கில் காட்டாமல் ரூ.50 கோடிக்கு பொருட்கள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ. 1 கோடி பணத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com