கள்ளச்சாராய விவகாரம் - நான்கு பேர் மீது குண்டாஸ்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழகத்தில் பூதாகாரமாக வெடித்தது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பல்வேறு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கள்ளச்சாராய விவகாரம் - நான்கு பேர் மீது குண்டாஸ்
Published on

கள்ளக்குறிச்சு கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இந்த வழக்கில் தமிழக காவல் துறை கைது செய்தவர்களில் மாதேஷ், சிவக்குமார், ஏழுமலை மற்றும் ஜோசப் என நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் 17 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலீசார் பரிந்துரைத்தனர்.

அதன்படி முதற்கட்டமாக நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com