ஆசியாவின் விடியலுக்கு விதையிட்ட பெருமகனாரின் கொள்கைகளை நினைவில் நிறுத்துவோம்- கமல்ஹாசன்

புதியதும் சக்தி வாய்ந்ததுமான நவீன இந்தியாவைக் கட்டமைத்த மாபெரும் தலைவர்.அணிசேராக் கொள்கை உள்ளிட்ட அவரது தொலைநோக்குப் பார்வைதான் நவ இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டன.
ஆசியாவின் விடியலுக்கு விதையிட்ட பெருமகனாரின் கொள்கைகளை நினைவில் நிறுத்துவோம்- கமல்ஹாசன்
Published on

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை ஒட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

புதியதும் சக்தி வாய்ந்ததுமான நவீன இந்தியாவைக் கட்டமைத்த மாபெரும் தலைவர்; காந்தியாரின் பேரன்பிற்குப் பாத்திரமானவர்; அறிவியல் சிந்தனையின் முன்னோடி பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளில் வணக்கம் செலுத்துகிறேன்.

தொழில் மயமாக்கல், விவசாய உற்பத்தி பெருக்கம், உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்குதல், அணிசேராக் கொள்கை உள்ளிட்ட அவரது தொலைநோக்குப் பார்வைதான் நவ இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டன.

ஆசியாவின் விடியலுக்கு விதையிட்ட பெருமகனாரின் கொள்கைகளை நினைவில் நிறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com