திருவண்ணாமலை தேவனாம்பட்டு கோவிலில் உலக நன்மைக்காக ஜப்பான் பக்தர்கள் சிறப்பு யாகம்

சிறப்பு மூலிகைகள், வாசனை திரவியங்கள் யாக குண்டத்தில் போடப்பட்டது.சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
உலக நன்மைக்காக சித்தர்களின் அருள் வேண்டி ஜப்பான் பக்தர்கள் தேவனாம்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு யாகம் செய்தபோது எடுத்த படம்.
உலக நன்மைக்காக சித்தர்களின் அருள் வேண்டி ஜப்பான் பக்தர்கள் தேவனாம்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு யாகம் செய்தபோது எடுத்த படம்.
Published on

திருவண்ணாமலை:

உலக நன்மைக்காகவும், உலகத்தில் இருந்து கொரோனாவை முற்றிலும் விரட்டவும், நாடு முழுவதும் நல்ல மழை பொழிய வேண்டிய சித்தர்கள் அருள் வேண்டி சித்தர்கள் வாழும் ஆன்மீக நகரமான திருவண்ணாமலை நகரை ஒட்டி அமைந்துள்ள தேவனாம்பட்டு கிராமத்தில் உள்ள சுயம்பு சுப்பிரமணியசாமி கோவிலில் ஜப்பான் பக்தர்கள் சிறப்பு யாகம் செய்தனர்.

இதில் பல்வேறு வகையான சிறப்பு மூலிகைகள் வாசனை திரவியங்கள் யாக குண்டத்தில் போடப்பட்டது.

இந்த யாகத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சாக்கிகோ ஓஷி, சாயாஓஷி, மாஸ்கோஓஷி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இந்த யாகத்திற்கான சிறப்பு ஏற்பாடுகளை மரக்காணத்தை பூர்வீகமாக கொண்ட ஜப்பான் குடியுரிமை பெற்ற சுப்ரமணியம் செய்திருந்தார்.

இந்த யாகத்தில் தேவனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதில் கோவில் குருக்கள் சந்தோஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகம் நடத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com