மாமல்லபுரத்தில் நடைபெற்ற அலைச்சறுக்கு போட்டியில் ஜப்பான் வெற்றி

மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி கடந்த 12-ந்தேதி தொடங்கியது.வீராங்கனைகள் சாரா வகிதா முதலிடமும், ஷினோ மட்சுடா 2-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற அலைச்சறுக்கு போட்டியில் ஜப்பான் வெற்றி
Published on

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி கடந்த 12-ந்தேதி தொடங்கியது.நேற்று அரையிறுதி மற்றும் இறுதி சுற்று போட்டியுடன் நிறைவடைந்தது. இதில் ஆண்கள் இறுதி போட்டியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த டென்ஷி இவாமி முதலிடம் பிடித்தார். சுவீடன் நாட்டை சேர்ந்த கியான் மார்ட்டின் 2-ம் இடத்தை பிடித்தார். பெண்கள் இறுதி போட்டியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் சாரா வகிதா முதலிடமும், ஷினோ மட்சுடா 2-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.

நிகழ்ச்சியில் கூடுதல் தலைமை செயலர் அதுல்யா மிஸ்ரா, இளைஞர் நலன் விளையாட்டுத்துறை உறுப்பினர்செயலர் மேகநாதன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com