ஜாக் அமைப்பு -தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருப்பூரில் ரம்ஜான் சிறப்பு தொழுகை: திரளானோர் பங்கேற்பு

நாட்டு மக்களுக்காகவும் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.
ஜாக் அமைப்பு -தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருப்பூரில் ரம்ஜான் சிறப்பு தொழுகை: திரளானோர் பங்கேற்பு
Published on

திருப்பூர்:

திருப்பூரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜம்மியத்துல் அஹ்லில் குர் ஆன் அமைப்பின் சார்பில் பெருநாள் தொழுகை ரேணுகா நகர் வளாகத்தில் நடைபெற்றது. தொழு கையினை முனிபி மகளிர் அரபி கல்லூரியின் முதல்வர் அப்துல் சமது பிர்தவ்ஸி நடத்தி வைத்தார். இந்த தொழுகையில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர்.

அதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்காகவும் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதே போல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் திருப்பூர் மாநகரில் 28 இடங்களில் ரமலான் பண்டிகை தொழுகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com