தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரி சோதனை

சென்னையில் 10 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.எழும்பூர் டான் போஸ்கோ பள்ளி அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரி சோதனை
Published on

சென்னை:

தமிழகத்தில் 30 இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை மதுரை, ஈரோடு, கோவை, சேலம், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னையில் 10 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை அண்ணா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை எழும்பூரில் உள்ள இன்னொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.

எழும்பூர் டான் போஸ்கோ பள்ளி அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதே போன்று செனாய் நகர், அமைந்தகரை உள்பட 10 இடங்களிலும் ரியல் எஸ்டேட் தொடர்பான அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடந்து வருகிறது. இதன் முடிவிலேயே வரி ஏய்ப்பு எவ்வளவு என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com