ஈஷா யோக மையத்தை வந்தடைந்தார் சத்குரு- கிராம மக்கள், உற்சாக வரவேற்பு

பாரம்பரிய முறையில் சத்குருவிற்கு உணர்ச்சிப்பூர்வமான வரவேற்பு அளித்தனர்.பலரும் சத்குருவை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
ஈஷா யோக மையத்தை வந்தடைந்தார் சத்குரு- கிராம மக்கள், உற்சாக வரவேற்பு
Published on

புதுடெல்லியில் மார்ச் 17-ம் தேதி நடைபெற்ற அவசர மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு சத்குரு அவர்கள் இன்று (ஏப்ரல் 11) கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்தடைந்தார்.

பழங்குடி மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் ஒன்று கூடி அவர்களின் பாரம்பரிய முறையில் சத்குருவிற்கு உணர்ச்சிப்பூர்வமான வரவேற்பு அளித்தனர். மேலும், சத்குருவின் வருகையையொட்டி, ஒட்டுமொத்த ஈஷா யோக மையமும் வண்ணமயமான அலங்காரங்களுடன் விழா கோலம் பூண்டது.

ஈஷாவில் தங்கி இருக்கும் ஆசிரமவாசிகளும், தன்னார்வலர்களும் சத்குருவை மீண்டும் பார்த்ததில் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தனர். பலரும் சத்குருவை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். 

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த சத்குருவை வரவேற்பதற்காக ஏராளமான பொதுமக்களும், தன்னார்வலர்களும் விமான நிலையத்தில் திரண்டனர்.

இதுதவிர, வழிநெடுகிலும், சாலை ஓரங்களில் உள்ளூர் கிராம மக்கள் ஒன்று கூடி பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து சத்குருவை வரவேற்றனர்.

இந்த தருணத்தில் அனைவரிடம் இருந்தும் சத்குருவிற்கு கிடைத்த அளவற்ற அன்பிற்கும் ஆதரவிற்கும் ஈஷா அறக்கட்டளை நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com