தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட திரிஷா நற்பணி மன்றம்?- மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை என்றும், மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால்... என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.
மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்
மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்
Published on

மதுரையில் முதன்முறையாக திரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டு ரசிகர் மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் திரிஷா அரசியலுக்கு வருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

அரசியலாக இருந்தாலும் சரி, ஆன்மிகமாக இருந்தாலும் சரி, மதுரையில் ஒட்டப்படும் பிரமாண்ட போஸ்டர்கள் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக மாறுவது காலங்காலமாக நடந்து வருகிறது.

அதிலும் பல மீட்டர் அளவுக்கு இடம்பெறும் போஸ்டர்கள் அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில் திரிஷா தொடர்பான போஸ்டரும் இடம்பெற்றுள்ளது.

நற்பணி மன்றம்

தமிழ் சினிமா உலகின் பிரபல நடிகையாக வலம் வரும் திரிஷா தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் நிலையில் அவரை அரசியலுக்கு அழைக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அதேபோல் திரிஷா அரசியலுக்கு வரவேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்.

இந்தநிலையில், மதுரையில் முதன்முறையாக திரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டு ரசிகர் மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் திரிஷா அரசியலுக்கு வருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில் தமிழக சங்க வரலாற்றில், முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா திரிஷாவுக்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம் என்ற வாசகத்தோடும், எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை என்றும், மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால்... என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

அந்த போஸ்டரில் வீரமங்கை வேலுநாச்சியாரின் படம் மற்றும் திரிஷா படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com