ஆண்டிபட்டி அருகே உடல் உறுப்புகளை அறுத்து பெண் கொடூர கொலை கள்ளக்காதல் பிரச்சினையா?

பால் கறக்கச் செல்லும் தொழிலாளர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து வருசநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அதே பகுதுயைச் சேர்ந்த சொக்கர் என்பவரை தேடி வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே உடல் உறுப்புகளை அறுத்து பெண் கொடூர கொலை கள்ளக்காதல் பிரச்சினையா?
Published on

வருசநாடு:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூர் அருகே உள்ள பொன்னம்மாள்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மனைவி சமுத்திரக்கனி (வயது 48). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

பெருமாள் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகனும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்தார். இதனையடுத்து தனது மூத்த மகளை பொன்னம்மாள் பட்டியிலும், 2-வது மகளை வருசநாடு அருகே உள்ள காந்திபுரம் பகுதியிலும் திருமணம் செய்து கொடுத்தார்.

2-வது மகளை திருமணம் செய்து கொடுத்த காந்திபுரம் பகுதியிலேயே வீடு எடுத்து சமுத்திரக்கனி தங்கி இருந்தார். பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இன்று அதிகாலை அவரது வீட்டு முன்பு சமுத்திரக்கனி ரத்தக்காயங்களுடன் கிடந்துள்ளார்.

அந்த பகுதிக்கு பால் கறக்கச் செல்லும் தொழிலாளர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து வருசநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது கை, கால், மார்பு என பல இடங்களில் அரிவாளால் வெட்டி கொடூரமான நிலையில் சமுத்திரக்கனி கிடந்தார்.

அவரை சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அதே பகுதுயைச் சேர்ந்த சொக்கர் என்பவரை தேடி வருகின்றனர். கள்ளக்காதல் பிரச்சினையில் இந்தக் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இசம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com