எல்லைத் தாண்டி மீன் பிடித்த 6 இலங்கை மீனவர்கள் கைது- இந்திய கடலோர காவல் படை நடவடிக்கை

இந்திய கடலோர காவல்படை மற்றத் துறையினருடன் இணைந்து இலங்கை சர்வதேச கடல் எல்லையை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இலங்கை மீனவர்களுடன்,  இந்திய கடலோர காவல்படையினர்
இலங்கை மீனவர்களுடன், இந்திய கடலோர காவல்படையினர்
Published on

இந்திய கடலோர காவல் படையைச் சேர்ந்த அமேயா  கப்பல், நாகப்பட்டினம் சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, இலங்கையை சேர்ந்த படகு எல்லைத் தாண்டி இந்திய பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. 


இதையடுத்து எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கைப் படகில் வந்த 6 பேரையும் கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை நாகப்பட்டினம் மெரைன் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்திய கடலோர காவல்படை மற்றத் துறையினருடன் இணைந்து இலங்கை சர்வதேச கடல் எல்லையை தீவிரமாக கண்காணித்து வருகிறது என அதன் மக்கள் தொடர்பு அலுவலர், (பாதுகாப்பு அமைச்சகம்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com