ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 700 கனஅடியாக அதிகரிப்பு

தமிழக எல்லையான பிலி குண்டுலுவில் திடீரென நீர் வரத்து இரு தினங்களுக்கு முன்பு அதிகரித்தது.தொடர்ந்து நேற்று நிலவரப்படி வினாடிக்கு 400 கன அடியாக நீர்வரத்து குறைந்தது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 700 கனஅடியாக அதிகரிப்பு
Published on

ஓகேனக்கல்:

கர்நாடகா அணைகளில் இருந்து கர்நாடகா மக்களுக்கு குடிநீர் தேவைகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் தமிழக எல்லையான பிலி குண்டுலுவில் திடீரென நீர் வரத்து இரு தினங்களுக்கு முன்பு அதிகரித்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த இரு தினங்க ளுக்கு முன்பு வினாடிக்கு 150 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் வினாடிக்கு வினாடிக்கு 1000 கன அடியாக அதிகரித்தது.

தொடர்ந்து நேற்று நிலவரப்படி வினாடிக்கு 400 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில் தற்போது நிலவரப்படி வினாடிக்கு 700 கன அடியாக மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்கின்றன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com