தூய்மை பணியாளரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயற்சி: வருமான வரித்துறை ஊழியர் கைது

பெண்ணின் போன் எண்ணை வாங்கி அதன் மூலம் அடிக்கடி பேசி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.தூய்மை பணியாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரெக்ஸ் கைது செய்யப்பட்டார்.
தூய்மை பணியாளரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயற்சி: வருமான வரித்துறை ஊழியர் கைது
Published on

சென்னை:

சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசின் வருமானவரி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உதவியாளராக ரெக்ஸ் (36) என்பவர் பணியாற்றி வருகிறார்.

அதே அலுவலகத்தில் தூய்மை பணியாளராக ஒரு பெண் பணி செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக அந்த பெண்ணுக்கு ரெக்ஸ் பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

அவரது போன் எண்ணை வாங்கி அதன் மூலம் அடிக்கடி பேசி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் பணிக்கு வந்த துப்புரவு ஊழியரிடம் ரெக்ஸ் தனது அறைக்கு தண்ணீர் கொண்டு வரும்படி கூறியுள்ளார். குடிப்பதற்காக தண்ணீரை கொண்டு சென்றபோது அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயற்சி செய்துள்ளார்.

அவரது பிடியில் இருந்து தப்பித்து வந்த பெண் ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ரெக்சிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து தூய்மை பணியாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரெக்ஸ் கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com