சென்னையில் வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 471 வழக்குகள் பதிவு

தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாதுசென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் சுமார் 100 இடங்களில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனை நடத்தினர்
சென்னையில் வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 471 வழக்குகள் பதிவு
Published on

சென்னை:

சென்னையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் வாகனங்களில் ஊடகம், போலீஸ் என பல்வேறு துறைகளை சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டி தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு போலீசாரிடம் இருந்து எளிதாக தப்பி விடுகிறார்கள்.

எனவே தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டி இருப்பவர்கள் மே 1-ந்தேதிக்குள் அதை அகற்ற வேண்டும். அப்படி அகற்றாமல் விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது இன்று முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என்று எச்சரித்தார்.

அதன் அடிப்படையில் சென்னையில் விதிகளை மீறி வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டியவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக போலீசார் இன்று முதல் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். இதற்காக சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் சுமார் 100 இடங்களில் இந்த அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டது.

இன்று முதல் முறையாக விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர். முதல் முறை வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னரும் 2-வது முறையாக விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினார்கள்.

இந்நிலையில், வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 471 வழக்குகள் பதிவு செய்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை. இதில் 121 போலீஸ் வாகனங்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com