மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்: கடலுக்கு இன்று மீன்பிடிக்க சென்றனர்

ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகுடன் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைப் பிடித்தனர்.மீனவர்களின் தங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர்.
மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்: கடலுக்கு இன்று மீன்பிடிக்க சென்றனர்
Published on

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டத் தின் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள்.

அவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த போதும், சிங்கள கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும் சிறைப்பிடித்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

சில வாரங்களில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டபோதிலும், படகுகளை இலங்கை அரசு அந்த நாட்டுடமையாக்கி விடுகிறது. இதனால் படகுகளை பறிகொடுக்கும் மீனவர்கள் வேறு வழியின்றி மாற்று தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகுடன் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைப் பிடித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனர்.

இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வரை மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மேலும் 5 ஆயி ரம் மீனவர்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்து பாதிப்புக்குள்ளாகினர். மீனவர்களின் தங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர்.

இதனைதொடர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இலங்கை கடற்படையின் அச்சமின்றி மீன்பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com