சென்னை ஐ.ஐ.டி.யில் உயர்கல்வியை தொடர 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி

ஐ.ஐ.டி.யில் ரோபோட்டிக்ஸ், கணக்கீட்டு பொறியியல் பாடப்பிரிவுகளை படிப்பதற்கு வெளிநாட்டு மாணவர்கள் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர்.
IIT Madras
Published on

சென்னை ஐஐடியில் மாணவர் சேர்க்கை:

சென்னை ஐ.ஐ.டி.யில் இந்த ஆண்டு முதுநிலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு சேர்க்கைக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் ஆர்வம்:

இதில் நேபாளத்தை சேர்ந்த 42 மாணவர்கள், வங்காள தேசத்தில் இருந்து 27 மாணவர்கள், எத்தியோப்பியாவை சேர்ந்த 18 மாணவர்கள், தான்சானியாவில் இருந்து 11 மாணவர்கள் என சுமார் 150 மாணவர்கள் ஐ.ஐ.டி.யில் படிப்பதற்கான சேர்க்கை கடிதம் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 90 வெளிநாட்டு மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. அனுமதி அளித்திருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் தங்களின் உயர்கல்வியை தொடர்வதற்காக ஐ.ஐ.டி.க்கு வர உள்ளனர்.

இதில் பெரும்பாலான மாணவர்கள் எம்.டெக் மற்றும் பி.எச்.டி. படிப்புகளில் சேர உள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.

ஐ.ஐ.டி. கல்லூரியில் ரோபோட்டிக்ஸ் மற்றும் கணக்கீட்டு பொறியியல் போன்ற பல்துறை பாடப்பிரிவுகளை படிப்பதற்காக வெளிநாட்டு மாணவர்கள் ஆர்வம காட்ட தொடங்கி உள்ளனர்.

இந்த மாணவர்களில் பலர் வெளியுறவு அமைச்சகத்தின் இந்திய கலாச்சார உறவுகள் மன்றத்தின் கல்வி உதவித்தொகை மூலம் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com